அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். அவர் படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ எப்படியும் ஓப்பனிங் வசூல் மிரட்டி விடும்.
அந்த வகையில் அஜித் ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆஞ்சினேயா, ஜி, ஜனா என தொடர் தோல்விகளை கொடுத்து வந்தார், அஜித் அவ்வளவு தான் இனி திரையுலகில் இருக்கமாட்டார் என்று பலரும் கிண்டல் செய்தனர்.
ஆனால், உடல் எடையை குறைத்து பரமசிவன், திருப்பதி என கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவருக்கான பழைய இடம் கிடைக்கவே இல்லை. மேலும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் அஜித்தும் அது இல்லை என்று அவருக்கு புரிந்தது.
நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த தன் காட்பாதர் படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சியில் அஜித் இறங்கினார், முதன் முறையாக மூன்று அஜித், கே.எஸ்.ரவிக்குமாருடன் இரண்டாவது முறையாக கூட்டனி என்று படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே காட்பாதர், வரலாறாக மாறி தீபாவளிக்கு வெளிவந்தது, படத்தில் அஜித் ரசிகர்களுக்கான விஷயம் நிறைந்த வழிந்தது.
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் பாராட்டும் அளவிற்கு அப்படத்தில் அஜித் நடிப்பு பட்டையை கிளப்பியது, பெண் தன்மை கொண்ட பரதநாட்டிய கலைஞராக அவர் நடித்தது அஜித் திரைப்பயணத்தின் பெஸ்ட் என்றே சொல்லிவிடலாம்.
அதற்கு அவருக்கு அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ப்லீம்பேர் விருது கூட கிடைத்தது, வரலாறு வெளிவந்து இன்றுடன் 11 வருடம் ஆகின்றது, அஜித் மீண்டும் இப்படி ஒரு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பம். மீண்டும் வரலாறு படைக்க வாங்க தல…