அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்..!!

238

ஞாயிற்றுகிழமை பிற்பகல் ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கிய பலத்த காற்றினால் ஏராளமான மின்கம்பங்கள் தகர்ந்துள்ளன.இவ்வாறு சரிந்த ஒரு மின்சார கம்பம் ஒன்று மனிதரொருவரின் காரின் மேல் சரிந்துள்ளது.

தான் எவ்வாறு தனது காரிற்குள் இருந்த வெளியேறினார் என்பது தனக்கு ஞாபகம் இல்லை என இவர் தெரிவித்தார்

ஏஜே என தன்னை அடையாளம் தெரிவித்த இவர் நேற்றைய பலத்த காற்று மற்றும் மழை நேரத்தில் றதவோட் வீதியில் மெதுவாக தனது காரை செலுத்து வந்துள்ளார்.வழி நெடுகிலும் மரங்கள் முன்னும் பின்னுமாக ஊஞ்சல் ஆடுவதை கவனித்த வண்ணம் மிக மெதுவாக காரை செலுத்தி வந்துள்ளார்.

திடீரென இஸ்லிங்ரன் அவெனியுவிற்கு அருகில் மின் கம்பம் ஒன்று சரியத்தொடங்கியுள்ளது. தவிரக்க முனைந்துள்ளார் ஆனால் கம்பம் இவரது காரின் மேல் சரிந்து முன் கண்ணாடியை நொருக்கியுள்ளது.

இவருக்கு அனைத்தும் இருட்டாகி விட்டது. மின் வயர்கள் அவரது வாகனத்தை சுற்றி விட்ட நிலையில் எவ்வாறு தான வெளியே வந்தார் என ஞாபகப்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.

வைத்தியசாலைக்கு சென்று சிறு காயங்களிற்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

SHARE