தாஜ்மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள்?- நடிகர் பிரகாஷ் ராஜ்

286

உத்தரபிரதேச மாநில அரசு சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தில் இருந்து ஆக்ராவில் உள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலை நீக்கியிருந்தது. இதற்கு பிரபலங்கள் மட்டுமில்லாது மக்களும் தங்களது கோபத்தை காட்டி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் தாஜ்மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கு முன்பு நான் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒரு முறை தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

SHARE