விஜய்யின் ரசிகர் மன்ற தலைவருக்கு ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்

197

பெரிய நடிகர்களின் படங்கள் வருகிறது என்றாலே சென்னை எப்படி கோலாகலமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் கூட விஜய்யின் மெர்சல் படத்தை வரவேற்பதற்கு ரசிகர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை பார்த்திருப்போம்.

கேரளாவில் நேற்று (அக்டோபர் 25) திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் லவ்டுடே ஸ்ரீநாத் இரவு கட்அவுட்கள் வைத்து விட்டு வீடு திரும்பும்போது பேருந்து மோதி அகால மரணம் அடைந்துள்ளார்.

இவரை மையமாக வைத்து அண்மையில் மலையாளத்தில் போக்கிரி சைமன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநாத்தின் இந்த மரணம் ரசிகர்கள் அனைவரையும் மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE