சென்னை: திரைஉலக காதல் ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் விரைவில் ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது, இவருக்கும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.
இதன்பின் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெளிநாட்டில் பிரமாண்டமாக கொண்டாடினார். அவருக்கு சொகுசு காரை பரிசளித்தார். இதையடுத்து ஜோடியாக வளம்வரும் இவர்கள், தங்களது காதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இருவரும் ரகசியமாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தவிர, இதை உறுதி செய்யும் விதமாக சென்னையில் பங்களா ஒன்றை இந்த ஜோடி வாங்கியுள்ளதாக தெரிகிறது. திருமணத்துக்கு பின் அவர்கள் அந்த பங்களாவில் குடியேற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த தகவலை இரு தரப்பில் இருந்தும் இன்னும் உறுதி செய்யவில்லை.