தென்னிந்திய திரைதுறையை சாடிய பிக் பாஸ் 11வது சீசன் போட்டியாளர் ஹினா கானிற்கு நடிகை ஹன்சிகா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரைதுறை, சேலை கட்டி நடிகைகளை கவர்ச்சியாக காட்ட மட்டுமே பயன்படுத்துதாக பிக் பாஸ் 11வது சீசன் போட்டியாளர் ஹினா கான் தெரிவித்தார்.
இதனால் மகேஷ் பாபுவின் பட வாய்ப்பை தான் புறக்கணித்ததாகவும் கூறியிருந்தார். இதற்கு நடிகை ஹன்சிகா, இதற்கு என்ன அர்த்தம்?, தென்னிந்திய திரைத்துறையை எப்படி நீங்கள் மட்டமாக பேசலாம்?, பாலிவுட்டை சார்ந்த பலர் இங்கே வேலை செய்கின்றனர். இப்படி பேச உனக்கு வெட்கமாக இல்லையா என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.