சம்பள பிரச்சனையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆரவ்- கைப்பற்றிய மற்றொரு நடிகர்

205

BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாவில் தங்களுக்கு என ஒரு பெயரை சம்பாதித்தவர்கள் இந்நிகழ்ச்சி பிரபலங்கள்.

தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட ஹரிஷ் கல்யாண், ரைசா இணைந்து இளன் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர் என அதிகாரப்பூர்வ தகவல் வந்தது. இப்படத்திற்கு கூட இளைஞர்களின் பேவரெட் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் கதையை படக்குழு முதலில் ஆரவ்விடம் தான் கூறியுள்ளனர். ஆனால் அவரோ கதையை கேட்காமல் சம்பளத்தை அதிகமாக கேட்டிருக்கிறார். இதனால் படக்குழு அவருக்கு பதிலாக ஹரிஷ் கல்யாணை அணுகியுள்ளனர்.

SHARE