நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் 7ம் தேதி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் கமல் அதை பின்னர் மறுத்தார்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் பிறந்தநாளுக்காக விஸ்வரூபம் 2 ட்ரைலரை வெளியிட முடிவெடுத்துள்ளாராம் கமல்.
இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.