டிசம்பரில் வெளியாகும் சத்யா..!

214

சிபிராஜ் நடிக்கும் சத்யா திரைப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம் சத்யா. தெலுங்கில் ரவி காந்த் இயக்கத்தில் வெளியான க்ஷணம் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சத்யராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்துள்ள இப்படத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். மேலும் நடிகை வரலக்‌ஷ்மி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் ஆனந்தராஜ், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சைமன்.கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அருண்மணி பழனி ஒளிப்பதிவும், படத்தொகுப்பாளராக கெளதம் ரவிச்சந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. மேலும் படத்தை பார்த்த தணிக்கை குழுவினரும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ள நிலையில் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி வெளிவரவிருந்த இப்படம் தற்போது அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE