பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்.

312

பல பிரபலங்கள் தங்களது அப்பாக்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரு சிலரே ஜெயிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி.

அண்மையில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதி மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹிப்ஹாப் ஆதியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இனி நான் சிங்கிள் கிடையாது என பதிவு செய்துள்ளார்.

SHARE