கலகலப்பாக படப்பிடிப்பை முடித்த சுந்தர்.சி..!!

264

சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கலகலப்பு 2’. இப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் காரைக்குடியில் தொடங்கியது. அதனை தொடர்ந்து காசி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. முழு படப்பிடிப்பும் டிசம்பர் இறுதியில் முடியும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படக்குழுவினர் ஒன்றாக புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

2012ம் ஆண்டும் வெளியான ‘கலகலப்பு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கலகலப்பு 2ம் பாகம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாகி வரும் இதில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

SHARE