சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக திருவனந்தபுரத்தில் சூர்யா ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் ரசிகைகளுக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுவது சூர்யாவின் படத்திற்குத்தான் என போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் இதற்கு முன்பே விஜய்யின் தெறி படம் வெளியானபோது காரைக்குடி சத்யன் திரையரங்கில் பெண் ரசிகைகளுக்காக தனியாக காலை 7 மணி சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது தவறாக விளம்பரப்படுத்தி வரும் சூர்யா ரசிகர்கள் மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.