ஆண் தொகுப்பாளர்களில் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டவர் ரியோ. இவர் தற்போது சரவணன்-மீனாட்சி என்ற சீரியலை தாண்டி அந்த தொலைக்காட்சியேலே ReadySteadyPo என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் உணவுகளை வீணாக்கப்படும் ஒரு பகுதி இருக்கிறது. இதுகுறித்து முதன்முறையாக ரியோ ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதாவது நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் காய்கறிகள் கோயம்பேட்டில் வீணாக இருக்கும் காய்களை பணம் கொடுத்து வாங்கிவந்து தான் பயன்படுத்துகிறோம். எங்கள் நிகழ்ச்சியில் தண்ணீர் மட்டும் ஐஸ்கட்டி மட்டும் தான் கொஞ்சம் வீணாகும் பொருள் என்று கூறியுள்ளார்.