பில்லா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் அஜித் கலந்துகொண்டது ஏன்- விஷ்ணுவர்தன் கூறிய தகவல்

279

அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட மாஸ் படம் பில்லா. இந்த படம் வெளியாகி 10வது வருடத்தை எட்டியுள்ளது, ரசிகர்களும் வழக்கம் போல் டாக்குகள் கிரியேட் செய்து டிரெண்ட் செய்தனர்.

எந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ளாத அஜித் பில்லா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தார். அதோடு படத்திற்காக பல தொலைக்காட்சிகளில் பேட்டிகளும் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் கேட்டபோது, புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அவருடைய விருப்பம் தான். பல வருடங்கள் கழித்து இப்படத்திற்காக அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை இதுவரைக்கு நான் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் அவர் செய்த புரொமோஷனால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

SHARE