நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளா டிக் டிக் டிக் 2018 ல் வெளியாக தயாராகி வருகிறது. அடுத்து சங்கமித்ராவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் பட பட்ஜெட் விசயத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய இயக்குனர் பெரியசாமி இயக்கும் அடங்க மறு படத்தில் அவர் கமிட்டாகியிருந்தார். சிறு ரெஸ்ட்க்கு பிறகு அவர் இதில் இறங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு படபூஜையுடன் துவங்கிவிட்டது.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக இப்படத்தின் ராஷி கண்ணா நடிக்கிறார். தீரன், மாயா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை ரவியின் மாமியார் சுஜாதா தயாரிக்கிறாராம்.