தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் பலருக்கும் பிடித்த மருமகளானார் சீதா. மிகவும் பொறுமையாகவும், குடும்பத்தில் உள்ளவரை அன்போடு அனுசரித்து போனது என அவரின் கேரக்டர் மிகவும் ஈர்க்கப்பட்டது.
கேரளாவை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நடிப்பிற்கு கொஞ்சம் பிரேக் விட்டுள்ளார். தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.
புது வாழ்க்கை, குடும்பம், கணவரின் உறவினர்கள் என அவர் மகிழ்ச்சியான நிலையில் இருக்கிறார். சமீபத்தில் ஹனிமூன் கொண்டாடினாராம். கணவருடன் மட்டுமல்ல.
தன் தோழியான நாத்தனாருடன் சென்றிருக்கிறார்.தற்போது பிரபல சானலில் இவர் டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டுவருகிறார். இயல்பில் இவர் ஒரு பரதநாட்டிய டேன்சராம்.
நடனம் எல்லையற்றது. கற்க வேண்டிய விசயங்கள் இன்னும் உள்ளது. சீரியல் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என சீதா (மேக்னா வின்செண்ட்) கூறுகிறார்.