டிஸ்கோ சாந்தி வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா- துயர சம்பவம்

182

தமிழில் உதயகீதம் என்ற படத்தில் நல்ல கதாபாரத்திரம் மூலம் அறிமுகமானவர் டிஸ்கோ சாந்தி. இவரது தந்தை நடிகராக இருந்தாலும் குடும்பம் பெரியது என்பதால் வறுமையில்தான் இருந்துள்ளனர்.

கொஞ்சம் வளர்ந்ததும் நடிப்பில் டிஸ்கோ சாந்தி முழு கவனம் செலுத்த அதே நேரத்தில் அவரது அப்பாவுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. தந்தையின் மருத்துவ செலவை சமாளிக்க தனக்கு வரும் கிளாமர் ரோல் கதாபாத்திரங்களிலும் நடித்தார். அப்பாவுக்காக நிறைய கிளாமர் ரோலில் நடித்து பணம் சம்பாதித்தாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

பின் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்ட சாந்திக்கு இரண்டு மகன் ஒரு மகள் பிறந்தனர். ஆனால் சிறு வயதிலேயே அந்த பெண் குழந்தை இறந்துவிட்டது.

பின் 2013ம் ஆண்டு அவரது கணவர் ஸ்ரீஹரியும் இறந்து போனார். அதன் பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு சமூக சேவையில் இறங்கினார் டிஸ்கோ சாந்தி. தனது அக்ஸ்ரா பவுண்டேசன் என்னும் ஒரு சமூக சேவை மையத்தை நடித்தி வருகிறார் சாந்தி.

SHARE