ஜெயம் ரவி வைத்தியசாலையில் அனுமதி

178

தென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தப்பட்டது.

மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கத்தில் இந்த கலை விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடனம், நகைச்சுவை, நடிகர் – நடிகைகள் கலந்துரையாடல், சில தமிழ் படங்களின் பாடல் வெளியீட்டு விழா உள்ளிட்ட பலவும் இடம்பெற்றன.

அதேநேரத்தில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.

இதில் ஏற்கனவே கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்ட நடிகர் ஆரி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மலேசியாவுக்கு செல்லும் போதே ஜெயம் ரவிக்கு காய்ச்சல் இருந்ததாகவும், காய்ச்சல் தீவிரம் அடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE