நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் அடுத்ததாக பாஸ்கர் தி ராஸ்கல் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் அவரின் மீது வாகன வரி ஏய்ப்பு மோசடி என வழக்கு தொடர்ப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் முறை கேட்டில் ஈட்டுபட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் போலிஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்ற சம்மன் பல முறை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லையாம்.
இதனால் கைதாகும் நிலையில் இருப்பதால் அவர் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் வரும் 15 ம் தேதி போலிஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.