அஜித் சார் சொல்வது மட்டும் ஏன், நடிகர் சங்கத்துக்கு பணம் கொடுக்கலாமே- பிரபல நடிகர் தாக்கு

185

வருட ஆரம்பத்தில் சினிமாவில் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்தது. அது என்ன என்று உங்களுக்கே தெரியும், நட்சத்திர விழா 2018. இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக மலேசியா ரசிகர்கள் முன்னிலையில் அமோகமாக நடந்தது.

இது ஒருபக்கம் இருக்க, எஸ்.வி. சேகர் போன்றோர் நிகழ்ச்சியின் மீது தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர். அஜித் கூட மக்களிடம் பணம் வாங்குவது நல்லது இல்லை என்று கூறியதாகவும் செய்திகள் வந்தன.

இந்த நிலையில் அண்மையில் நட்சத்திர விழா குறித்தும் அஜித்தின் கருத்து குறித்து பேசியுள்ளார் நடிகர் சௌந்தரராஜன்.

அவர் பேசும்போது, நடிகர் சங்கம் நிகழ்ச்சி நடத்துகிறார்கள், இதில் ஒளிபரப்பு செய்ய, தங்களது நிறுவனத்தை பிரபலப்படுத்த சிலர் ஸ்பான்சர் செய்தனர். அவ்வளவு தான் மக்களிடம் வாங்கி தான் கட்டடம் கட்ட வேண்டும் என்பது இல்லை. அதில் வந்த கொஞ்ச பணம் கூட மலேசியாவில் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். அப்படி ஏதாவது கருத்து இருந்தால் சொல்வதற்கு பதிலாக அஜித் சார் பணம் கொடுக்கலாமே, செய்யலாமே என்று பேசியுள்ளார்.

SHARE