இந்த வருட பொங்கலுக்கு நிறைய புதிய படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. ரசிகர்களும் எந்த படம் எப்போது பார்ப்பது என்று தெரியாமல் குழம்பி போனர்.
தற்போது பொங்கல் ஸ்பெஷலாக ஒளிபரப்பான படங்களில் எந்த படம் தொலைக்காட்சி டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. ரஜினியின் கபாலி, விஜய்யின் மெர்சல் என ஒளிபரப்பப்பட்டது.
இதில் டிஆர்பியில் ரஜினியின் கபாலி படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு வாரத்திற்கான TRP என்றாலும், மெர்சல், கபாலி ஒளிப்பரப்பிய சமயத்தில் மெர்சலை விட கபாலி படத்திற்கு TRP அதிகம் என கூறப்படுகின்றது.