அஜித் நடிப்பில் விசுவாசம் படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. வியாழக்கிழமை வந்ததுமே ரசிகர்கள் செம்ம குஷியாகிவிட்டனர்.
எப்படியும் படத்தின் அப்டேட் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, படத்தின் தயாரிப்பாளர் ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார்.
இதில் அவர் கூறுகையில் ‘கடைசி 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருந்தோம், தற்போதும் அந்த வேலை தான் தொடர்கின்றது.
அந்த வேலை முடிந்த பிறகு தான் யார் நடிகர், நடிகைகள் என்பதை தெரிவிக்க முடியும். ஆனால், அடுத்த வாரத்திலிருந்து ரசிகர்களுக்கு தேவையாக செய்திகள் கண்டிப்பாக வரும்’ என தெரிவித்துள்ளனர்.