தமிழ் சினிமாவில் சிலர் பேசும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் கமல்ஹாசனை தாண்டி பார்த்திபன் பேசும் பேச்சுக்கு பலரும் அடிமைகள்.
இவர் சமீபகாலமாக ரஜினி, கமல், ஏ.ஆர். ரகுமான் என முன்னணி பிரபலங்களை சந்தித்து வருகிறார். எதற்காக என்று இதுவரை தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
அவரின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி லீலா பேலஸில் நடைபெற இருக்கிறது. ஆனால் கீர்த்தனா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார் என்பன போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.