படம் வெளியான பின்பும் மீண்டும் பத்மாவத் படத்திற்கு வந்த சோதனை! ரசிகர்கள் ஏமாற்றம்

196

படம் வெளிவரும் முன்பே சர்வதேச அளவில் தேடப்பட்ட படம் பத்மாவத். பல தடைகளுக்கு பிறகு இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் சில இடங்களில் வன்முறைகள் நடந்தது.

இவ்வளவு சூழ்நிலையில் இப்படத்தை முதல் நாள் பார்த்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 10 லட்சம் பேர். லண்டன், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் படம் வெளிவந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலும் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளார்கள். ஆனால் மலேசியாவில் படத்தை வெளியிட அந்நாட்டு திரைப்பட தணிக்கை குழு அனுமதி மறுத்துள்ளது.

அதன் தலைவர் முகமது அஜீஸ் இப்படம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக உள்ளது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் இந்த நாட்டில் இப்படத்தை வெளியிட்டால் சரியாக இருக்காது என கூறியுள்ளார்.

இதன் விசாரணை இன்று நடைபெறுகிறது.

SHARE