சூர்யாவின் சோதனை தொடர்கிறது, ரசிகர்கள் வருத்தம்

184

சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். மாஸ், கிளாஸ் என இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்தவர்.

அப்படியிருக்க சமீப காலமாக அவரின் சோதனை பயணங்கள் தொடர்ந்து கொண்டே வருகின்றது.

ஆம், சூர்யாவிற்கு அஞ்சான் படம் தான் பெரிய தோல்வியை கொடுத்தது, அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த மாஸ், 24, சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் வரை தோல்வி படங்களே.

இதில் 24, தானா சேர்ந்த கூட்டம் படம் மட்டும் தெலுங்கில் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இப்படி சூர்யாவின் மார்க்கெட் தொடர்ந்து தமிழகத்தில் குறைந்து வந்தாலும், அடுத்து இவர் செல்வராகவன், கே.வி.ஆனந்த் ஆகியோருடன் இணைந்திருப்பது எல்லோருக்குமே மகிழ்ச்சி தான்.

கண்டிப்பாக இந்த படங்கள் அவரின் மார்க்கெட்டை பழைய நிலைமைக்கு கொண்டு வரும் என்று எதிர்ப்பார்ப்போம்.

SHARE