11 ‘உதயம் என்.எச் 4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஹீரோ. அவர் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்தி வெளியானது. இதையடுத்து த்ரிஷா இப்படத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. த்ரிஷாவுக்குப் பதிலாக, ‘இவன் வேற மாதிரி’ படத்தில் அறிமுகமான சுரபி நடிக்கிறார்