தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் எப்போதும் மார்க்கெட் இருக்கும் வரை தான் டாப்பில் இருப்பார்கள். மார்க்கெட் குறைந்தால் திருமணம், சீரியல் என ஒதுங்கிவிடுவார்கள்.
இந்நிலையில் நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா போன்ற ஹீரோயின்கள் இன்னும் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது, இதற்கும் காரணம் தற்போது ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள படங்களையும் ரசிகர்கள் வரவேற்பது தான். இதனால், ஹீரோயின்கள் சம்பளமும் உயர்ந்துள்ளது, அதன் விவரங்கள் இதோ..
நயன்தாரா
நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ 3 கோடி வரை சம்பளமாக பெறுவதாக தெரிகின்றது, மேலும், விசுவாசத்தில் ரூ 5 கோடி பெற்றதாக கிசுகிசுக்கப்படுகின்றது, ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
அனுஷ்கா
அனுஷ்கா, தமிழில் எப்படி நயன்தாராவோ, அதுபோல் தெலுங்கில் இவர், இவரும் படத்திற்கு ரூ 3 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகின்றது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதால் இவர் சம்பளம் எப்படியும் ரூ 1 கோடி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமன்னா, சமந்தா
தமன்னா, சமந்தா போன்ற ஹீரோயின்கள் வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை என்றாலும், பெரிய படங்களில் இருப்பதால் சுமார் ரூ 1.5 கோடி வரை சம்பளமாக பெறுவதாக தெரிகின்றது.
காஜல்
காஜலும் படத்தின் பட்ஜெட்டிற்கு தகுந்தார் போல் சம்பளம் பெறுகின்றார், இவர் நடிக்கும் குயின் பட ரீமேக்கிற்கு எப்படியும் ரூ 2.5 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பார், மற்ற படங்களில் ரூ 1.5 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என கூறப்படுகின்றது.