நடிகை ஸ்ரேயா சரணின் திருமணம் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில்..!

215

நடிகை ஸ்ரேயா சரணின் திருமணம் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா சரண். இவர் 2003இல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தார். ஆனால், சமீபகாலமாக ஸ்ரேயாவுக்கு படங்கள் குறைந்து விட்டது.

இதையடுத்து தமிழில் ரீஎன்ட்ரியாக சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்த பிறகு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ‘நரகாசுரன்’ படத்திலும் நடித்துவருகிறார் ஸ்ரேயா சரண். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிஸியாக நடித்துவருகிறார். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ‘பைசா வசூல்’ படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஸ்ரேயா மாலத்தீவில் டைவிங் கேம்பில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்துக் காதல்வயப்பட்டதாகவும், நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் மும்பை டெய்லி பத்திரிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

SHARE