சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் எடுத்து வெளிவந்த படம் வேலைக்காரன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் நேற்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது, இதனால், படக்குழு சந்தோஷமாக இதை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது இப்படம் 50 நாட்கள் கடந்து உலகம் முழுவதும் ரூ. 86 கோடி வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 58 கோடி வசூல் செய்துள்ளது.
கர்நாடகாவில் ரூ. 4 கோடி கேரளாவில் ரூ. 1.5 கோடி மற்ற மாநிலங்களில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது.
வெளிநாடுகளில் இப்படம் ரூ. 22 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் வெளிநாடுகளிலும், இந்தியாவில் வெளி மாநிலங்களிலும் வேலைக்காரன் ஹிட் அடித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிக தொகைக்கு வியாபாரம் நடந்ததால் சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.