தான் மாஸ் என நிரூபித்த விஜய்! வாயடைத்துபோன சீனியர் நடிகர்

166

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் விஜய். அவரின் படங்கள் பல் ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட் என பல சாதனைகளை செய்துள்ளது. தன் அப்பா இயக்குனர் சந்திர சேகரின் படத்தில் அறிமுகமானாலும் தன் உழைப்பும், முயற்சியால் தான் இப்படி ஒரு பெரிய இடத்தில் பிடித்திருக்கிறார்.

அவர் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானாலும் பூவே உனக்காக படம் பெரிய முக்கியத்துவத்தை கொடுத்தது. 1996 ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றோடு 21 வருடங்களை கடந்து விட்டது.

ஆரம்பத்தில் இப்படத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தெரிந்தவுடன் இயக்குனரிடம் கதையை கேட்டுள்ளார் சீனியர் நடிகவர். அப்போது அவர் குருவி மீது ஏன் பனக்காயை சுமத்துகிறீர்கள். அவர் தாங்குவாரா என கேட்டாராம்.

இயக்குனர் நான் சரியாக தான் தேர்வு செய்திருக்கிறேன். அந்த பையன் நன்றாக வருவார் என கூறினாராம். மேலும் நாகர்கோவிலில் படப்பிடிப்பு நடந்த போது விஜய் மிக நீளமான வசனத்தை கூட ஒரே டேக்கில் முடித்துவிட்டாராம்.

தகவல் அறிந்த அந்த சீனியர் நடிகரும் ஆச்சர்யப்பட்டுள்ளார்.

SHARE