அண்ணன் தாக்கியதில் சகோதரிகள் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பருத்தித்துறைப் பகுதியில் நேற்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடிகாயங்களுக்கு இலக்கான சகோதரிகளில் ஒருவர் நஞ்சு அருந்திய நிலையிலும், மற்றையவர் தலையில் காயத்துடனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நஞ்சருந்தியவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தமது சகோதரனே தம்மைத் தாக்கிக் கொடுமைப்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.