ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசமான உணவுப் பழக்க வழக்கங்கள் இருக்கும். அதிலும் ஜப்பானை எடுத்துக்கொண்டால் புதிது புதிதாக எதாவது கண்டுபிடிப்பதில் வல்லவர்கள்.
தற்போது “Girl sweat sauce” எனும் புதிய சோஸை அறிமுகம் செய்திருக்கிறார்கள். பெயரை வைத்துப் பார்த்தால் பெண்களின் வியர்வையிலிருந்து தயாரிக்கப்படு சாஸ் என்று பொருள்படும். ஆனால் அது உண்மையில்லையாம்.
பாலாடைக்கட்டி, உப்பு, எலுமிச்சை சாறு போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த சோஸைத் தயாரிக்கிறார்களாம்.