தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து மிகவும் தெளிவாக படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான நாச்சியார் படம் விமர்சனங்களை தாண்டி ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.
தற்போது ஜோதிகா, வித்யா பாலன் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிந்தி படமான தும்ஹாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். ராதா மோகன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் வரும் ஏப்ரல் இறுதியில் என்று கூறப்படுகிறது.
தற்போது இப்படத்திற்கு படக்குழு உங்கள் ஜோ என்று பெயரிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்பை கேட்ட ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.