தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு

182

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். அவரை பற்றி ஏதாவது ஒரு விஷயம் தவறாக பேசினாலும் ரசிகர்கள் அவர்களை மன்னிப்பு கேட்கும் வரை விடா மாட்டார்கள்.

அந்த வகையில் விஜய்க்கு பிரபல பத்திரிகை ஒன்று மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கொடுத்தது.

இந்த விருது விழா சமீபத்தில் நடந்து முடிய, இதை நேற்று பிரபல தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது.

இதில் சில வாரங்களுக்கு முன் வந்த அருவி படத்தின் படக்குழுவும் இந்த விழாவில் பங்கேற்றது, ஏனெனில் இப்படம் பல விருதுகளை வென்றது.

இந்த படத்தில் விஜய்யை கிண்டல் செய்வது போல் ஒரு சில காட்சிகள் வரும், இதனால் விஜய் ரசிகர்கள் கோபம் ஆனார்கள்.

ஆனால், விஜய் முதலில் அருவி டீமை வாழ்த்திவிட்டு தான் போய் அமர்ந்தார், இதனால், விஜய் ரசிகர்கள் இதை குறிப்பிட்டு ‘இது தான் தளபதி மனசு’ என கூறி வருகின்றனர்.

SHARE