விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் சில நாட்களுக்கு முன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. கீர்த்தி சுரேஷ் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருப்பதால் வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் ரகசியமாக சில விசயங்களை வைத்திருந்தாலும் எப்படியாவது லீக் ஆகிவிடுகிறது.
அண்மையில் இப்படத்தில் விஜய்யின் போட்டோ ஷூட் வீடியோ, புகைப்படம் என லீக்கானது. இந்நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று எப்படியோ வெளியாகியுள்ளது.
இதில் விஜய் கருப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு கண்ணில் கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். இந்த படம் தான் தற்போது வைரல். யாரோ மரத்தடியில் இருந்து மறைவாக போட்டோ எடுத்துள்ளது தெரிகிறது.