விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விஜய் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் வில்லன்களாக ராதா ரவி மற்றும் கருப்பையா நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது.
இந்த நிலையில் ஏற்கெனவே நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் நிலையில் நடிகை வரலட்சுமி இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.