என்ன ஆனது விசுவாசம், வெடித்ததா மோதல்- உண்மை வெளிவருமா?

192

தல நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வரவுள்ள படம் விசுவாசம். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று வரை தொடங்கவில்லை.

இதற்கு பல காரணம் சொன்னாலும் ஒரு சிலர் தயாரிப்பாளருக்கும் சிவாவிற்குமே மோதல், அதனால் தான் படம் தொடங்கவில்லை என்று கூறுகின்றனர்.

மேலும், அஜித் சிவாவிற்கு முழு ஆதரவு தர, தயாரிப்பாளர் தரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே விவேகம் படுதோல்வியை சந்திக்க, இயக்குனரை மாற்றலாம் என சத்யஜோதி நிறுவனம் ஆரம்பத்திலேயே கூறியதாகவும், அதற்கு அஜித் மறுத்ததாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

இதனால் விசுவாசம் நின்று விடுமோ என்ற எண்ணம் பலருக்கும் வரத்தொடங்கியுள்ளது, சிவா அல்லது சத்யஜோதி நிறுவனம் சொன்னாலே உண்மை வெளிவரும்.

SHARE