அஜித், விஜய் மற்றும் நயன்தாரா பற்றி சுவாரஸ்ய விஷயங்களை கூறிய சிம்பு

272

நடிகர் சிம்பு பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். மணிரத்னம் படத்தில் தற்போது நடித்து வரும் சிம்பு சூப்பர் சிங்கர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்திரான சென்றிருந்தார்.

அப்போது சிம்பு பேசும்போது, நான் தைரியமாக பேசுவதற்கு அஜித் அவர்கள் காரணம். ஒரு தமிழனாக விஜய்அவர்களுக்கு தம்பியாக இருப்பதற்கு எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய கஷ்ட காலங்களில் அவர் எனக்கு மிகப் பெரிய பலம் என்றார்.

அதேபோல் நயன்தாரா பற்றி பேசும்போது, வல்லவன் படத்தின் ஒரு போஸ்டர் வெளியாகி பெரிய பிரச்சனை ஆனது. எனக்கு எந்த கவலையும் இல்லை நயன்தாராவுக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டபோது, அந்த பட இயக்குனர் நீங்கள், நான் கலைஞன் நடித்தேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். இதனால் அவர் இந்த இடத்தில் இருக்கிறார் என்றார்.

SHARE