மறைந்த நடிகை ஸ்ரீதேவிஅவர்களுக்காக பிராத்தனை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் சூர்யா-ஜோதிகா, சிவகுமார், ஏ.ஆர்.ரகுமான், பிரபு தேவா, கார்த்திஎன நிறைய பேர் கலந்து கொண்டனர்.
அஜித் பிராத்தனை கூட்டத்தில் இல்லை என்றாலும் அதற்கு முன்பே ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று போனி கபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கு நடுவில் விஜய் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற பெரிய கேள்வி எழும்பியது. தற்போது அதற்கான காரணம் என்னவென்றால், வரும் மார்ச் 16ம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கம் முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர்.
அதற்குள் வேகமாக படத்தின் காட்சிகளை எடுக்க படக்குழு வேலை செய்து வருகிறார்களாம். தான் ஸ்ரீதேவி கூட்டத்திற்கு வந்தால் நேரம் ஆகும் படக்குழு அனைவரும் கஷ்டப்படுவார்கள் என்பதால் விஜய் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.