பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருபவர் இர்பான் கான் . இவர் சில நாட்களுக்கு முன் தனக்கு ஒரு கொடிய நோய் இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பரிசோதனை செய்துவிட்டு நானே உங்களுக்கு சொல்கின்றேன் என்று கூற, தற்போது அவரே தன்னுடைய நோய் குறித்து கூறியுள்ளார்.
இதில் இவர் தனக்கு Neuroendocrine Tumor வந்துள்ளதாகவும், உங்களது அன்பு தனக்கு எப்போதும் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.