பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் போட்டி பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பேர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வெற்றிநடைபோட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடந்துவரும் இந்நிகழ்ச்சியில் ஜெயந்தி என்பவர் நிறைய கஷ்டங்களுக்கு இடையில் பாடி வருகிறார்.
இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பாடகி ஜானகி அம்மாவைகாணும் வாய்ப்பை கொடுத்துள்ளனர் தொலைக்காட்சி நிறுவனம். இதனை நிகழ்ச்சியில் சொல்லி அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.