கூட நடித்த என்னையே யார் என்றே நயன்தாராவிற்கு தெரியவில்லை- வளரும் நடிகை ஓபன் டாக்

241

நயன்தாரா தற்போதெல்லாம் மிகவும் கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான அறம் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் இன்று தெலுங்கில் ரிலிஸாகி நல்ல ஓப்பனிங் கிடைத்து வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தவர் தான் சுனு லட்சுமி.

இவர் ஒரு மலையாளி என்பதால் படப்பிடிப்பில் நயன்தாராவிடம் மலையாளத்தில் தான் பேசுவாராம், படப்பிடிப்பு முடிந்து படம் ரிலிஸாகி ஒருநாள் நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாராவை சுனு ஒரு விருது விழாவில் சந்தித்தாராம்.

அப்போது நயன்தாரா இவரை கண்டுக்கொள்ளவே இல்லையாம், சில மணி நேரம் கழித்து தான் நீங்கள் தான் சுனுவா? என கேட்டாராம்.

பிறகு மார்டன் உடையில் உங்களை அடையாளம் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கூறி சென்றாராம்.

SHARE