தமிழ் சினிமாவிற்கு கடந்த சில நாட்களாகவே பெரும் துயர சம்பவமாக நடந்து வருகின்றது. ஸ்ரீதேவி மரணத்தில் இருந்தே யாரும் மீளவில்லை.
அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயந்தி.
இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் உடல் நலம் முடியாமல் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் என முன்னணி தொலைக்காட்சிகளே கூறினர், ஆனால், இப்போது கிடைத்த தகவலின்படி ஜெயந்தி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை இதில் உண்மையில்லை, நாங்களே என்ன நிலவரம் என்பதை சில மணி நேரங்களில் தெரிவிக்கின்றோம் என கூறியுள்ளனர்.