நடிகர் விஜய் மற்றும் மகேஷ் பாபு இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளது. இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்கள். மகேஷ் பாபு நடித்த பல ஹிட் படங்களின் தமிழ் ரீமேக்கில் விஜய் தான் நடித்துள்ளார்.
விஜய்-மகேஷ் பாபு இருவரையும் ஒன்றாக நடிக்கவைத்து ஒரு படம் இயக்க தயார் என இயக்குனர் முருகதாஸ் முன்பு கூறியிருந்தார். அது எப்போது நடக்கும் என பல ரசிகர்கள் வெயிட்டிங்.
இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு Bharat Ane Nenu என்ற படத்தில் நடித்துள்ளார். அது அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. அதனால் இந்த படத்தில் பணியாற்றிய துணை இயக்குனர்கள் மற்றும் முக்கிய டெச்னீசியன்களுக்கு ஐபோன் X பரிசளித்துள்ளார் மகேஷ் பாபு.
எப்போதும் நடிகர் விஜய் தான் தன் ஒவ்வொரு படத்தின் முடிவிலும் படக்குழுவுக்கு தங்ககாசு, செயின் என பரிசளிக்கும் வழக்கம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பின்பற்றி மகேஷ் பாபு தற்போது ஐபோன் கொடுத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.