டாஸ்மாக்கை மூட முடியுமா, சித்தார்த் சரமாரி கேள்வி

242

சென்னையில் நேற்று ஐ பி எல் லுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் விளைவாக சென்னையில் நடக்கவிருந்த அடுத்து வரும் கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஐ பி எல் சிஎஸ்கே மேட்ச்க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, வாழ்த்துக்கள்.

இதே போல் போராட்டம் நடத்தி டாஸ்மாக்கை மூட முடியுமா, எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களையும் மூட முடியுமா, எல்லா போராட்ட தளங்களில் கட்சி கொடியை நீக்கமுடியுமா, தமிழ் நாட்டில் பல வருந்தத்தக்க விஷயங்கள் உள்ளது அதற்காக மக்கள் போராடுவார்களா என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

SHARE