அனைவரையும் கவலைக்குள்ளாகும் ஒரு நோயாகப் பார்க்கப்படுவது வெண்புள்ளி நோய். நமது வெளித்தோற்றத்தை மாறுபட செய்யும் ஒருவகையான நிறமிழப்பு தான் வெண்புள்ளி எனக் கூறப்படுகிறது. உண்மையில் வெண்புள்ளி என்பது ஒரு நோய் அல்ல, தலையில் உள்ள முடியில் நிறமிழப்பு ஏற்படுகிறது, அதனை நரை என்கிறோம் அதுபோலத்தான் வெண்புள்ளிகள்.
உடலில் உள்ள சில இடங்களில் இயல்பான நிறத்தை இழந்து வெண்மையாய்த் தெரியும். ஆகவே இது ஒரு நோய் எனும் மாய எண்ணத்திலிருந்து விடுபட்டு விடுவது அவசியம்.
காரணங்கள்
வெண்புள்ளி (vitiligo) பல காரணங்களால் ஏற்படும். மரபணு மாற்றம், எதிர்ப்பு சக்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம், சுய எதிர்ப்பு சக்தி நோய்கள் (autoimmune disease ), தைராய்டு, நீரிழிவு, ரத்த சோகை போன்ற நோய்களாலும் வெண்புள்ளிகள் வரலாம்.
கண்களில் உள்ள மெலனோசைட்கள் காதுகளில் உள்ள மெலனோசைட்கள் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் வரலாம்.
வெண்புள்ளி வருவதன் காரணங்களைக் குறிப்பிட்டுக் கூற முடியாது . நம் உடலில் நச்சுப் பொருட்கள் உண்டாவதும் அழிவதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
Oxidative stress என்று அழைக்கப்படும் இவ்வகை நச்சு தன்மைகள் நமக்கு பலவித பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற பெரிய நோய்களுக்கு வழிவகுக்கும், இந்த நச்சுத் தன்மையை free radicals என்று அழைப்போம். இந்த free radicals நச்சுத்தன்மைதான் வெண்புள்ளிகள் வருவதற்கும் வழி வகுக்கிறது.
பெரும்பாலும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை திரும்ப திரும்ப பயன்படுத்தி உண்பதன் மூலம்தான் இவ்வகை நச்சுக்கள் பரவுகின்றன. ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.
வெண்புள்ளியின் வகைகள்
பொதுவாக உடலில் ஒரு இடத்தில சிறியதாக ஆரம்பித்து பல இடங்களில் மெல்ல பரவும் வெண்புள்ளிக்கு Vitiligo Vulgaris என்று பெயர். இந்த நோயினால் உடல் பாதிப்பை விட மனதளவில் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம்.
சிறு குழந்தைகளுக்கு Segmental Vitiligo என்கிற வெண்புள்ளி தொந்தரவு ஏற்படலாம். சில சமயங்களில் இது பெரியவர்களுக்கும் வரும். ஒரு குறிப்பிட்ட நரம்பு செல்லும் பாதையில் மட்டுமே இந்த வெண்புள்ளி ஏற்படும்.
இந்த வகையில் உடலில் உள்ள மொத்த சருமமும் மெலனோசைட்க்களால் அழிக்கப்பட்டு முழுமையாக வெண்மையாக மாற்றி விடும்.
இந்த வகையில் உடலில் ஒரு சிறு இடத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படும். சருமம் எங்கும் இது பரவாது.
இந்த வகை வெண்புள்ளிகள் உதடு மற்றும் பிறப்புறுப்பு மற்றும் மார்புக்காம்புகளில் மட்டும் காணப்படும்.
இந்த வகையில் உதடு கை விரல் நுனிகள் மற்றும் கால் விரல் நுனிகள் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். இதை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியாது.
இதில் முக்கியமானது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் வெள்ளையாகத் தெரிவது எல்லாமே வெண்புள்ளி ஆகிவிடாது. அனைத்து வயதினருக்குமே ஒரு சிறு மிளகு அளவு அல்லது பட்டாணி அளவு வெண்புள்ளி ஏற்படக்கூடும். அதற்கு Idiopathic guttate hypomelanosis என்று பெயர். காரணமின்றி ஏற்படும் சிறு புள்ளி என்பது இதன் பொருள். இது எதுவும் செய்யாது பரவாது அரிக்காது ஆகவே இதனை அப்படியே விட்டு விடுவது நல்லது.
ஏதாவது அடிபடுவதன் மூலமாகவோ தீக் காயங்கள் மூலமாகவோ நிறமிழப்பு ஏற்படும்.
நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் மூலமாக இவ்வகை வெண்புள்ளிகள் தோன்றுகிறது. ஸ்டிக்கர் பொட்டுகள், செருப்பு, தோல் பர்ஸ்கள் , டாட்டூக்கள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு இவை வருகின்றன.
நம் உடலில் உள்ள மச்சத்தின் அருகில் ஏற்படும் வெண்புள்ளிகள் halo nevus என்று அழைக்கப்படும்.
வெண்புள்ளி வந்தால் செய்ய வேண்டியவை
முதலில் சரும நல நிபுணரை அணுக வேண்டும், நோய் கட்டுக்குள் உள்ளதா அல்லது கட்டுப்பாட்டை மீறிவிட்டதா என்பதை முதலில் முறையாகத் தெரிந்து கொண்டு பின்பு தான் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். சிகிச்சைகள்மெலனோசைட்டைத் தட்டி எழுப்பும் Growth factors அல்லது ஸ்டீராய்டு களிம்போ மற்ற மருந்துகளோ தடவுவதன் மூலம் வெண்புள்ளிகளை குணமாக்கலாம். இதனை என்று மருத்துவ மொழியில் குறிப்பிடுகின்றனர்.
களிம்புகளால் குணமடையாத போது அறுவை சிகிச்சை மூலம் தொடையில் நிறமிழக்காத தோலை எடுத்து நிறமிழந்த இடத்தில் வைக்கலாம். இந்த அறுவை சிகிச்சையில் Split skin grafting, Miniature punch grafting மற்றும் Suction after grafting என்று பலவகைகள் உள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் இப்போது Melanocyte cell suspension, Epidermal cell Suspension, Automated Epidermal harveshing procedure போன்ற சிகிச்சை முறைகளில் குணப்படுத்த முடியும்.
முக்கியமாக நோய் ஆரம்பிக்கும் போதே சிகிச்சை தொடங்க வேண்டும். மருத்துவரின் மீதான நம்பிக்கை வேண்டும், மனத்தெளிவு, தொடர் சிகிச்சை போன்ற விஷயங்களை பின்பற்றி வந்தால் சுலபமாக வெண்புள்ளிகளில் இருந்து விடுதலை பெற்றுவிடலாம்.