ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு மரபணுக்கள், மன அழுத்தம், கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்கள், உணவு முறை, காலநிலை மாற்றம் மற்றும் மோசமான தலைமுடி பராமரிப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன. ஆனால், இவற்றையும் தாண்டி ஒரு சில ஆரோக்கிய பிரச்சனைகளும் காரணம்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Pcos)
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருக்க வாய்ப்புள்ளது. பிசிஓஎஸ் என்பது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அல்லது ஆன்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவு அதிகமாகி, மயிர்கால்களில் உள்ள நொதிகளுடன் இணைந்து, மயிர்கால்களைப் பெரிதாக பாதித்து, உதிரச் செய்யும்.
இரும்புச்சத்து குறைபாடு உடலில் இரும்புச்சத்தின் அளவு குறையும் போது, உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாமல், உடல் முழுவதும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இப்படி மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில், தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், அதன் வளர்ச்சியும், வலிமையும் குறைந்து, உதிர ஆரம்பிக்கும்.
இந்நிலையில் உடனே இரும்புச்சத்துள்ள உணவுகளையும், சப்ளிமெண்ட்டுகளையும் எடுப்பதன் மூலம், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம். ஹைப்போ தைராய்டு ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்காமல் இருக்கும் நிலையாகும். இப்படி தேவைக்கு குறைவாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் போது, தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தலையில் மட்டுமின்றி, புருவங்களிலும் தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.
லூபஸ்
லூபஸ் என்பது ஒரு வகையான ஆட்டோஇம்யூன் நோய்களாகும். இந்த வகை நோய் இருந்தால், தலைமுடி உதிரும். இந்த நோயினால், நோயெதிர்ப்பு மண்டலமானது ஆரோக்கியமான திசுக்களை தாக்கி, அழற்சியை உண்டாக்கும். ஒருவருக்கு லூபஸ் நோய் இருந்தால், அதன் முதல் அறிகுறியாக தலைமுடி உதிர்ந்து மெலிய ஆரம்பிக்கும். இதுதவிர, புரோட்டீன், ஜிங்க் சத்து குறைபாடுகளாலும் தலைமுடி உதிர்வு ஏற்படும்.