மொத்த தமிழ்நாடும் இழந்த விசயத்திற்காக ஜி.வி.பிரகாஷ் செய்த செயல்!

208

பல ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து தற்போது முழுநேர நடிகராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். ஐங்கரன், 100 சதவீதம் காதல், 4G, செம, அடங்காதே, சர்வம் தாள மயம் என பல படங்கள் இருக்கிறது.

அதோடு பல விசயங்களுக்கு குரல் கொடுத்து வருவதோடு களத்தில் இறங்கி போராடும் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வுக்காக இறந்துபோன மாணவி அனிதாவின் மரணம் அவரை மிகவும் பாதித்திருக்கிறது. இதனால் அனிதாவின் குடும்பத்திற்கு ஜி.வி. உதவிகள் செய்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு பலரும் குரல் கொடுத்தாலும் மத்திய அரசு செவி சாய்ப்பதாக இல்லை. இந்நிலையில் தற்போது நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயிற்சிக்காக ஜி.வி புது செயலி (APP) ஒன்றை உருவாக்கியுள்ளாராம். இதுகுறித்த விவரத்தை அவர் ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளாராம்.

SHARE