உண்மைத்தொழிலாளிகளின் வாழ்க்கை நிலை அமிதாப் பச்சனின் 102 நாக் அவுட் திரைப்படத்தில்

155

சினிமாவை ரசிப்பவர்களும் உண்டு. உண்மையாக நேசிப்பவர்களும் உண்டு. சில படங்களில் பல உண்மைத்தொழிலாளிகளின் வாழ்க்கை நிலை படம் மூலம் எடுத்து சொல்வார்கள். அதில் ஆட்டோக்காரர்களின் கதையும் அடங்கும். அண்மையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் அமிதாப் பச்ச 102 நாக் அவுட் என்ற படத்தில் 102 வயது தாத்தாவாக நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் ஒரு காட்சியில் அமிதாப் ஆட்டோவில் பயணிப்பது போல எடுக்கப்பட்டதாம்.

அப்போது நடந்தது தான் எதிர்பாராத ஒன்று. அப்போது அமிதாப் சாதாரணமாக ஆட்டோ டிரைவரின் வாழ்க்கை பற்றி விசாரித்துள்ளார். உடனே அவரும் வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். ஆனாலும் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. உழைப்பு எனக்கு அதன் பலனை கொடுத்தது. அதுபோல உங்களுடைய உழைப்பின் மதிப்பு உங்களை உயர்த்தும். கவலைப்படாதீர்கள்  என சகஜமாக பேசியுள்ளார். ஸ்கிரிப்டில் இல்லாத இதை படக்குழு அப்படியே படமாக்கிவிட்டார்களாம். டிரைவரின் பேச்சை கேட்டு அசந்துவிட்டாராம். படக்குழுவுக்கும் மகிழ்ச்சியாம்.

SHARE