சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் திருமண விழா ஒன்றில் கரீனா கபூரின் இளம் வயது துள்ளலுடன் ஆடிய நடனம்

215

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் திருமண விழா ஒன்றில் ஆடிய நடனம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சயீப் அலிகானின் முதல் மனைவி அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலிகான். சில இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் அவர், மும்பையில் திருமண வரவேற்பில் பங்கேற்றார். அப்போது, 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான விஸ்வாத்மா திரைப்படத்தில் இடம் பெற்ற சாத் சமுந்தர் என்ற ஹிட் பாடல்  ஒலிபரப்பானது. புகழ்பெற்ற அந்தப் பாடலில் லயித்துப் போன சாரா, திடீரென துள்ளலாக நடனமாடத் தொடங்கினார். அங்கிருந்தவர்களும் கைதட்டி உற்சாகப்படுத்த, சாரா நளினமாக அடி எடுத்து வைத்து ஆட்டம் போட்டார். சாராவின் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள நடன காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது சிற்றன்னை கரீனா கபூரின் இளம் வயது துள்ளலுடன் சாரா நடனமாடியதாக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

SHARE